உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில்

கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில்

தமிழில் சித்திரம் பேசுதடி மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பாவனா. அதனைத் தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள அனோமி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் நடிகை பாவனா வரும் கேரள சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடப் போகிறார் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

சமீபத்தில் அனோமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாவனாவிடம் இது குறித்து நேரடியாகவே கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாவனா, “இந்த செய்தியை நானும் பார்த்தேன். ரொம்பவே வேடிக்கையாக இருந்தது. பார்த்ததுமே சிரிப்பு வந்தது. யார் இப்படி எல்லாம் ஒரு கதையை உருவாக்கி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை” என்று பதில் அளித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாவனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !