மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
269 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
269 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
269 days ago
அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்து வசூலை குவித்து வரும் படம் ‛புஷ்பா 2'. இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இந்த சிறுவனை ஐந்தாம் தேதி நேரில் சென்று பார்க்க அல்லு அர்ஜுன் தயாரான போது, காவல்துறை அவருக்கு தடை விதித்திருந்தது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு அல்லு அர்ஜுன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்கள். என்றாலும் அதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்று, இன்றைய தினம் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுவனின் உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அப்போது மருத்துவமனையில் 20 நிமிடங்கள் இருந்துள்ள அல்லு அர்ஜுன், சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடத்தில் கேட்டறிந்தார் . அல்லு அர்ஜுன் கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியிருக்கிறது.
269 days ago
269 days ago
269 days ago