உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? -மேலாளர் விளக்கம்

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? -மேலாளர் விளக்கம்


சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் விஷால், வரலட்சுமி, சந்தானம், நிதின் சத்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் 'மதகஜராஜா'. விஜய் ஆண்டனி இசையமைத்த இந்த படம் கடந்த 12 ஆண்டுகளாக திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்த நிலையில் வருகிற 12ம் தேதி பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுகிறார்கள். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால், மைக்கை பிடித்து பேசியபோது அவரது கைகள் நடுங்கியது. விஷாலின் தோற்றமும் பெரிய அளவில் மாறி போயிருந்தது. அதையடுத்து விஷாலுக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சல்தான் இதற்கு காரணம் என்று மருத்துவ சான்றிதழையும் வெளியிட்டார்கள்.

என்றாலும் தற்போது விஷாலின் இந்த நிலைக்கு காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம்தான் என பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படியான நிலையில், விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது விஷால் வைரஸ் காய்ச்சல் காரணமாக உடல் வலி மற்றும் சோர்வில் இருக்கிறார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் இருந்துபடி ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. அது முற்றிலும் வதந்தி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !