யஷ் பிறந்தநாளில் வெளியான 'டாக்ஸிக்' டீசர்
ADDED : 317 days ago
கன்னடத்தில் உருவான 'கேஜிஎப்' என்ற படத்தில் இரண்டு பாகங்களிலும் நடித்து பிரபலமானவர் யஷ். அதையடுத்து தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணம்' படத்தில் ராவணன் வேடத்திலும், நடிகை கீது மோகன் தாஸ் இயக்கும் டாக்ஸிக் படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த படமும் கேஜிஎப் பாணியில் ஒரு பிரமாண்டமான கதையில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று யஷின் பிறந்தநாள் என்பதால் 'டாக்ஸிக்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் ஒரு மாஸான பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது.