உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 வருடங்களுக்கு பிறகு இணையும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.எல். விஜய்!

8 வருடங்களுக்கு பிறகு இணையும் ஹாரிஸ் ஜெயராஜ் - ஏ.எல். விஜய்!


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தமிழ், தெலுங்கு மொழிகளில் பெரும்பாலான முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்று ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அடுத்து இசையமைக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
'வனமகன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து ஏ.எல். விஜய் இயக்கும் புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என ஹாரிஸ் ஜெயராஜ் பியானோ வாசிக்கும் வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'KRR' என தலைப்பு வைத்துள்ளனர். மாலி அன்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !