அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திற்கு யுஏ சான்றிதழ்!
ADDED : 266 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆதவ், ரெஜினா, யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருந்த நிலையில் பின்வாங்கி விட்டது. அடுத்து ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் இந்த விடாமுயற்சி படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 மணி நேரம் 30 நிமிடம் 40 வினாடிகள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்தில் இடம்பெற்ற கெட்ட வார்த்தைகளை ஐந்து இடங்களில் சென்சார் போர்டு கத்தரித்துள்ளதாம்.