மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
237 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
237 days ago
தெலுங்கில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், ஊர்வசி ரவுட்டாலா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்கு மகாராஜ்'. இந்த படம் ஜனவரி 12ம் தேதியான நேற்று தெலுங்கில் வெளியாகி உள்ளது. பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் திட்டமிட்டபடி தமிழ், ஹிந்தியில் நேற்று வெளியாகவில்லை.
இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்டுள்ள செய்தியில், 'டாக்கு மகாராஜ் படத்தின் தமிழ், ஹிந்தி பதிப்புகளின் டெக்னிக்கல் பணிகள் தாமதமாகி வந்ததால் ஜனவரி 12ம் தேதி வெளியாகவில்லை. என்றாலும் தற்போது பணிகள் முடிவடைந்து தணிக்கை குழுவின் சான்றிதழும் பெற்று விட்டோம். அதனால் ஜனவரி 17ம் தேதி இந்த படம் தமிழ், ஹிந்தியில் வெளியாக உள்ளது' என்று தெரிவித்திருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்த டாக்கு மகாராஜ் படத்தை பாபி கொல்லி என்பவர் இயக்கியுள்ளார்.
237 days ago
237 days ago