முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா!
ADDED : 275 days ago
கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த விஷாலின் 'மதகஜராஜா' படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? என்ற சந்தேகத்துடன் வெளியானது. ஆனால் இந்த மதகஜராஜா முதல் நாளில் 3 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. பாலாவின் 'வணங்கான்' கூட முதல் நாளில் 1.5 கோடிதான் வசூலித்தது. மேலும், இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம் காமெடியனாக நடித்திருப்பதால் பொங்கல் விடுமுறை நாட்களில் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இன்னும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.