உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல்

'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல்


தமிழில் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அதை அடுத்து கார்த்தி நடிக்கும் 'சர்தார்-2' படத்தில் நடித்தவர், தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த படத்தில் தனது வேடம் குறித்து மாளவிகா மோகனன் கூறுகையில், ''பிரபாஸுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று எனது கனவு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு இந்த ராஜா சாப் படத்தில் நானே எதிர்பாராத வகையில் மிகவும் சவாலான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

அதனால் இந்த படத்திற்கு பிறகு என் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் இதுபோன்று தனித்துவமான கதாபாத்திரங்களை தருவார்கள். இந்த ராஜா சாப் படம் தெலுங்கில் எனக்கு மிகப்பெரிய என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார். திகில் கலந்த காமெடி கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் நிதி அகர்வாலும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !