புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்'
ADDED : 274 days ago
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்துள்ள படம் 'கேம் சேஞ்ஜர்'. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.186 கோடி வசூலித்து ஒரு நல்ல ஓப்பனிங்கை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இந்த கேம் சேஞ்ஜர் படத்தை சினி டப்ஸ் என்ற ஆப்பில் வெளியிடப்போகிறார்கள். இதன் ஆப்பின் மூலம் பார்வையாளர்கள் எந்த ஒரு மொழிகளிலும் இந்த படத்தை பார்த்து ரசிக்க முடியும். இதே சினி டப் என்ற ஆப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா- 2 படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆப் மூலம் புஷ்பா -2க்கு கிடைத்த வரவேற்பு போன்று கேம் சேஞ்ஜருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.