உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை


மலையாள நடிகர் ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் தற்போது பிரம்மாண்ட வரலாற்றுப் படமாக உருவாகி வரும் 'கத்தனார்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2023ல் சுவாதிக் ரஹீம் என்பவர் துவங்கிய சேவ் பாக்ஸ் என்கிற நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தமானார் ஜெயசூர்யா. அந்த நிறுவனம் தனது முதலீட்டாளர்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாதி ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த செயலியின் விளம்பர தூதராக ஜெயசூர்யா இருந்ததால் அவரையும் அமலாக்கத்துறை அவ்வப்போது அழைத்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வகையில் கடந்த திங்கள்கிழமையும் அமலாக்கத்துறை முன்பு தனது மனைவியுடன் விசாரணைக்கு ஆஜர் ஆனார் ஜெயசூர்யா. நடிகர் ஜெயசூர்யாவுக்கு இந்த சேவ் பாக்ஸ் செயலி நிறுவனத்தின் உள்நோக்கம் மற்றும் அதன் நடைமுறைகள் நிஜமாகவே தெரிந்திருந்ததா, இல்லை அவர் அதை அறியவில்லையா என்பது குறித்து எல்லாம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேலும் அவரிடம் சேவ் பாக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவரது வங்கி கணக்கு நடைபெற்ற பண பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 39 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெயசூர்யாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !