ரம்பாவின் ரீ-என்ட்ரியை வரவேற்கும் ரசிகர்கள்
ADDED : 285 days ago
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. 90-களில் டாப் நடிகையாக வலம் வந்த ரம்பா, 2010 ஆம் ஆண்டில் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். அதன்பின் அவ்வப்போது சென்னை வரும் ரம்பா டிவி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குறிப்பாக நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டான ஜோடி ஆர் யூ ரெடி முதல் சீசனில் சாண்டி மாஸ்டர், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் நடுவராக பங்கேற்று இருந்தனர். தற்போது அதன் இரண்டாவது சீசன் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் ரம்பா நடுவராக பங்கேற்கவுள்ள தகவல் புரோமோவின் மூலம் வெளியாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அழகு பதுமையாக ஜொலிக்கும் ரம்பாவை திரையில் பார்த்த ரசிகர்கள் 'ரம்பா சார்' என கமெண்ட் அடித் ரம்பாவின் ரீ-என்ட்ரிக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.