மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
258 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
258 days ago
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் படிக்கிற காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து அவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், திடீரென்று கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்கள்.
திருமண வாழ்க்கையில் இருந்து அவர்கள் பிரிந்து வாழ்ந்தபோதும், ஜி.வி.பிரகாஷ் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் சைந்தவி. அதோடு அவரது இசையிலும் பின்னணி பாடி வருகிறார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நாங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டபோதும், ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை உள்ளது. அதன்காரணமாகவே தொழில் ரீதியாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இது எப்போதும் போல் தொடரும் என்று கூறியுள்ளார் ஜி.வி .பிரகாஷ்.
258 days ago
258 days ago