பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
ADDED : 261 days ago
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதையடுத்து லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தார். தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டிராகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் பிரதீப். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரெபெல் படத்தில் நடித்தார். விஜய் 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை சுதா கெங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.