உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ்

விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‛விடாமுயற்சி'. திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் அனேக படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பொங்லுக்கே வெளிவர வேண்டிய படம் பட பணிகள் முடியாததால் தள்ளிப்போனது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை இன்று(ஜன., 16) மாலை 6:40 மணியளவில் வெளியிட்டனர். 2:21 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலர் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளாக நிறைந்துள்ளது. ஒரு பயணத்தில் தொலைந்து போன தனது மனைவி திரிஷாவை தேடும் அஜித் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரை பார்க்கையில் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

டிரைலர் துவக்கம் முதல் இறுதிவரை பக்கா ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் உள்ளது. அஜித் ஒரு பக்கம், அர்ஜூன் ஒரு பக்கம் என ஆக்ஷனில் அசத்துகின்றனர். அனிருத்தின் பின்னணி இசையும் அதற்கு பக்காவாக பொருந்தி உள்ளது. மேலும் டிரைலருடன் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் பிப்., 6ல் உலகம் முழுக்க வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !