திருமணமெல்லாம் எனக்கு செட் ஆகாது - ஷகிலா பளீச்
ADDED : 344 days ago
வெள்ளித்திரையில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பபட்ட ஷகிலா, சின்னத்திரையின் மூலம் அம்மா என்ற கவுரவத்தை பெற்றார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில அவரது இமேஜையே மாற்றியிருந்தது. இதனையடுத்து பிரபலமான சில யூ-டியூப் சேனல்களில் ஆங்கராக அவதாரம் எடுத்தார். அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு, 'திருமணம் செய்து கொண்டு என்னால் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை' என பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார்.