மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
257 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
257 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
257 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
257 days ago
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அப்படத்தின் நாயகன் பிரபாஸ் பான் இந்தியா நடிகர் என்ற பிரபலத்தை அடைந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படமும் 1000 கோடி வசூலைக் கடந்தது. அதனால், அவர்கள் இருவரும் பான் இந்தியா ஹீரோக்களாக உயர்ந்தனர்.
அப்படத்தை அடுத்து அவர்கள் இருவரும் தனி ஹீரோவாக நடித்த படங்கள் மீது திரையுலகினர், ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இருவரும் அப்படி நடித்து வெளிவரும் படங்கள் 1000 கோடி வசூலைப் பெறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ஜுனியர் என்டிஆர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'தேவரா 1' படம் சுமார் 500 கோடி வசூலை மட்டுமே பெற்றது. படத்தின் பட்ஜெட்டே 300 கோடி என்று சொன்னார்கள். அதனால், குறைந்த அளவில் சுமார் 75 கோடி மட்டுமே லாபத்தைக் கொடுத்தது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
ராம் சரண் நடித்து கடந்த வாரம் 'கேம் சேஞ்ஜர்' படம் வெளிவந்தது. இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் 400 கோடி. ஆனால், இதுவரையில் சுமார் 250 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளது. முதல் நாள் வசூலுக்குப் பிறகு தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இப்படம் இதுவரையிலும் சுமார் 50 சதவீதம் மட்டுமே மீட்டுள்ளது. இன்னும் 125 கோடி வசூலித்தால்தான் லாபக் கணக்கை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. அது சாத்தியமா என்பது சந்தேகம்தான் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
ஜுனியர் என்டிஆர் கூட 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு 500 கோடி வசூல், கொஞ்சம் லாபம் என 'தேவரா' மூலம் பார்த்துவிட்டார். ஆனால், ராம் சரண் நடித்து வந்த 'கேம் சேஞ்ஜர்' 500 கோடி வசூலைப் பார்ப்பதும், லாபத்தைப் பார்ப்பதும் கடினம் என்கிறார்கள்.
அதே சமயம் 'புஷ்பா 1' படத்தில் பான் இந்தியா அளவில் கொஞ்சமாக பிரபலமான அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' படம் மூலம் 1900 கோடி வசூலை நெருங்கிவிட்டார். தெலுங்கு ஹீரோக்களைப் பொறுத்தவரையில் பிரபாஸ் அடுத்து அல்லு அர்ஜுன்தான் பான் இந்தியா அளவில் சக்சஸ்புல் ஹீரோ என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்.
257 days ago
257 days ago
257 days ago
257 days ago