மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
230 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
230 days ago
இந்திய சினிமாவில் ஒரு சில நடிகைகள்தான் நாற்பது வயதைக் கடந்தாலும் அவர்களது அழகை அப்படியே மெயின்டைன் செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த் ஜோடியாக 'சிவாஜி' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் செய்த ஒரே ஒரு தவறால் இங்கு டாப் நடிகையாக இடம் பிடிக்காமல் போய்விட்டார். வடிவேலு நாயகனாக நடித்த 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடியதும் மற்ற எந்த ஹீரோக்களுடம் அவருடன் ஜோடி சேருவதை விரும்பவில்லை.
ரஷ்யரான ஆன்ட்ரிய் கோஸ்சீவ் என்பவரை ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார் ஸ்ரேயா. அவ்வப்போது படங்களில் நடித்தும் வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிட்டு, தான் இன்னும் இளமையான தோற்றத்தில் இருப்பதை காட்டி வருபவர்.
நேற்று பிகினி ஆடையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். எனது சிறு வயதிலிருந்தே அதே கிளாமருடன் பார்க்கிறேன் என ரசிகர் ஒருவர் கமெண்ட் அடிக்கும் அளவிற்கு இளமையாக இருக்கிறார் ஸ்ரேயா.
230 days ago
230 days ago