மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
229 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
229 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
229 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
229 days ago
மலையாள சினிமாவில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அசத்தி வருபவர் சாய் பல்லவி. தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் தமிழில் வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் நாகசைதன்யா உடன் தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். மீனவர்கள் பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் பிப்., 7ம் தேதி திரைக்கு வருகிறது.
சாய் பல்லவி கூறுகையில், நான் பொது இடங்களுக்கு செல்லும் போது பலர் திடீரென அவர்களின் அலைப்பேசி மூலம் என்னை போட்டோ எடுப்பார்கள். அது எனக்கு பிடிக்காது. நான் மரமோ அல்லது விலை உயர்ந்த கட்டிடங்களோ அல்ல. உயிர் உள்ள மனுஷி. உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என கேட்டு எடுத்தால் நல்லது. என்னை சுற்றி அதிக கூட்டம் இருந்து எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தால் எனக்கு பயமாகவும், கூச்சமாகவும் இருக்கும். அளவுக்கு மீறிய வகையில் எதையாவது யோசிப்பேன். இந்த பழக்கத்தை கைவிட தினமும் தியானம் செய்கிறேன். எல்லாற்றுக்கும் மேலாக குறைந்த மேக்கப் உடன் சம்பிராதய முறைப்படி இருக்க விரும்புகிறேன்'' என்றார்.
229 days ago
229 days ago
229 days ago
229 days ago