மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
254 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
254 days ago
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் மற்றும் பலர் நடித்து 12 ஆண்டுகளாகத் தேங்கி நின்ற படமான 'மத கஜ ராஜா' படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்து நன்றாக வசூலித்து வியாபார ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருந்த படத்தை தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் முயற்சித்து வெளிக் கொண்டு வர உதவினார்.
இத்தனை வருட படம் வெளிவர உதவியவர்கள் இது போல் தேங்கி நிற்கும் 'துருவ நட்சத்திரம், சர்வர் சுந்தரம், இடம் பொருள் ஏவல், நரகாசூரன்' உள்ளிட்ட படங்களையும் கொண்டு வருவார்களா என்ற கேள்வி எழுந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர வைக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கூட இயக்குனர் கவுதம் மேனன், அவருடைய 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளிக் கொண்டு வர யாரும் உதவி செய்யவில்லை என தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.
திரையுலகில் உள்ள பைனான்சியர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து முடங்கிப் போய் உள்ள முக்கிய படங்களை வெளிக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். பைனான்சியர்கள் அவர்களது வட்டியைக் கூடக் கேட்காமல் அசல் தொகை வந்தாலே போதும் என சொல்வதாகத் தெரிவித்திருந்தார். இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமாவில் இப்படி ஒரு விஷயம் இதுவரையில் நடந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
254 days ago
254 days ago