மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
254 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
254 days ago
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் 'மார்கோ' என்கிற திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருந்த இந்த படத்தை இயக்குனர் ஹனீப் அதேனி இயக்கியிருந்தார். வில்லனாக கபீர் துகான்சிங் நடித்திருந்தார். வன்முறை காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் கூட இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அது மட்டுமல்ல இந்த படம் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றதுடன் வடகொரியாவிலும் பாகுபலி படத்திற்கு அடுத்ததாக வெளியான தென்னிந்திய படம் என்கிற பெருமையையும் பெற்றது.
இப்படி வசூல் ரீதியாகவும் வரவேற்பு ரீதியாகவும் வெற்றி பெற்ற படத்தில் நடிகர் ரியாஸ் கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக படம் வெளியான போது தான் நடித்த காட்சிகள் ஒன்று கூட படத்தில் இடம் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரியாஸ் கான். ஆனால் படத்தின் இயக்குனர்களை ஹனீப் அதேனி படத்தொகுப்பில் இறுதி வடிவம் கொடுக்கும்போது தவிர்க்க முடியாமல் ரியாஸ் கான் நடித்த காட்சிகளை நீக்க வேண்டியதாகி விட்டது என்று கூறி அவரை சமாதானப்படுத்தி உள்ளார்.
இத்தனைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் ரியாஸ் கான் ஏற்கனவே ஒரு படத்தில் பேசிய 'கேறி ரிவா மோனே' என்கிற வசனத்தை உன்னி முகுந்தனுடன் இணைந்து பேசி ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டார் ரியாஸ் கான். அது அப்போது வைரலாக பரவி மார்கோ படம் பற்றி ரசிகர்களிடம் பேச வைத்தது. ஆனால் அப்படிப்பட்ட ரியாஸ் கான் வெற்றி படத்தில் நடித்தும் கூட இன்று தனது காட்சிகள் அதில் இல்லையே.. இயக்குனரின் முடிவு என்கிற போது நாம் என்ன செய்வது” என்று தனது விரக்தியை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
254 days ago
254 days ago