மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
254 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
254 days ago
தமிழில் 'திமிரு, மரியான்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன். ஆனாலும் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இவரை தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் வரை பேச வைத்து விட்டது. அதேசமயம் இப்படி படங்களில் கிடைக்கும் புகழை விட இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதன் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகளுடன் தகராறு செய்தார். பின்னர் கடந்த வருடம் கேரளாவில் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கோவாவில் ஒரு டீக்கடைக்காரரிடம் தகராறு செய்தது வைரலாக பரவியது.
இந்த நிலையில் தற்போது தனது வீட்டு பால்கனியில் நின்றபடி பச்சை நிற வேட்டி அணிந்து எதிர் வீட்டுக்காரர் ஒருவரை அநாகரிக வார்த்தைகளால் அர்ச்சித்து விநாயகன் பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் திடீரென வேட்டியை அவிழ்த்து காட்டியது, பால்கனியில் நிலை தடுமாறி உள்பக்க தரையில் விழுந்தது என அவர் மது போதையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் பலரும் கூறும்போது, நல்ல திறமையான நடிகர் இப்படி தேவையில்லாமல் சர்ச்சைகளில் சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறாரே என தங்களது வருத்தத்தை கமெண்ட்டுகளாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
254 days ago
254 days ago