வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்!
ADDED : 258 days ago
நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் மகனான நாகசைதன்யா, சமந்தாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதையடுத்து நடிகை சோபிதாவை காதலித்து சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. இந்த நிலையில், தற்போது நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகனான அகில் அக்கினேனியின் திருமணம் வருகிற மார்ச் 24ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே அகில் மற்றும் லண்டனை சேர்ந்த ஜைனப் ராவத்ஜி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நாகசதன்யா - சோபிதா திருமணம் நடைபெற்ற அதே அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தற்போது அகில் - ஜைனப் ராவத்ஜி திருமணம் மார்ச் 24ல் பிரமாண்டமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.