உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல்

பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல்

'ராஜபார்வை' படத்தின் கமர்ஷியல் தோல்வியால் துவண்டிருந்த கமல், பின்னர் ஜெயித்தே காட்ட வேண்டும் என்ற உறுதியோடு ஹாலிவுட் டைப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற உறுதியெடுத்து ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாணியில் உருவாக்கியதுதான் அன்றைய 'விக்ரம்'. டிம்பிள் கபாடியா, அம்ஜத்கான் ஆகியோரை நடிக்க வைத்து அப்போதே பான் இந்தியா படமாக தந்தார்.

தமிழ் சினிமா வரலாற்றில், கோடிகளில் உருவான முதல் படம் . 'அக்னிபுத்திரன்' என்ற ஏவுகணையைக் கடத்தி விடும் கும்பலில் இருந்து, ஹீரோ எப்படி நாட்டைக் காக்கிறார் என்ற, 'ஜேம்ஸ்பாண்ட்' கதை தான், விக்ரம்.

இப்படத்திற்காக, 'சலாமியா' என்ற கற்பனை நாடு உதயமானது. ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு, சலாமியா என, பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள, எலி கோவிலில் எடுக்கப்பட்ட காட்சிகள், ரசிகர்களை ஆச்சரியப்பட செய்தன.

இளையராஜாவின் இசையில், 'விக்ரம், வனிதாமணி, சிப்பிக்குள் ஒரு முத்து, என் ஜோடி மஞ்சக்குருவி, மீண்டும் மீண்டும் வா...' போன்ற பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.

இந்த படத்தின் மீதிருந்து பெரிய நம்பிக்கை காரணமாக படத்தின் முதல் காட்சி வசூலை யுனிசெப் அமைப்பின் குழந்தைகள் நல பிரிவுக்கு வழங்குவதாக அறிவித்தார் கமல். அதன்படியே செய்தார். இதற்கென்று தனியாக விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தி அதில் வந்த வசூலையும் யுனிசெப் அமைப்புக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !