உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : திடீரென மீண்டும் ஹீரோவாக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன்

பிளாஷ்பேக் : திடீரென மீண்டும் ஹீரோவாக நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரன்

1960 மற்றும் 70களில் ஹீரோவாக நடித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அதன்பிறகு குணசித்ர வேடங்களில் நடித்தார். கடைசியாக 1966ம் ஆண்டு 'மணிமகுடம்' என்ற படத்தை இயக்கி நடித்தார். அவரே தயாரிக்கவும் செய்தார். விஜயகுமாரி, ஜெயலிதா நடித்தனர். அதன்பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் திடீரென 1982ம் ஆண்டு 'இரட்டை மனிதன்' என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்தார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லதா நடித்தார். தங்கையாக சுமித்ரா நடித்தார். இவர்கள் தவிர ஜெய் கணேஷ், பவானி, சுருளி ராஜன், வி.கே.ராமசாமி, மனோராமா, காந்திமதி உள்ளிட்ட பலர் நடித்தனர். இதில் அவர் எம்ஜிஆர் பாணியில் பெண்கள் விஷயத்தில் ராமராகவும், தங்கை மீது பாசம் கொண்டவராகவும் நடித்தார். ஆனால் படம் வெற்றி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !