சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் ‛பேரழகி' காயத்ரி
ADDED : 267 days ago
திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த எதிர்நீச்சல் தொடர் தற்போது இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது. முதல் சீசனை போலேவே இந்த சீசனும் ஆரம்பம் முதலே அமர்க்களப்படுத்தி வருகிறது. நாயகி ஜனனி முதல் குட்டி பாப்பா தாரா வரை பல கதாபாத்திரங்களில் புது நடிகர்களை நடிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் பேரழகி தொடரின் மூலம் பிரபலமான காயத்ரியை முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்க செய்துள்ளனர். பேரழகி தொடருக்கு பின் நீண்ட இடைவெளியில் காயத்ரி ரீ-என்ட்ரி கொடுப்பதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.