உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஞ்சனா 4ம் பாகத்தில் இன்னொரு நாயகியாக நோரா பதேகி

காஞ்சனா 4ம் பாகத்தில் இன்னொரு நாயகியாக நோரா பதேகி

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரியஸ் ஆக வெளிவந்த படங்கள் காஞ்சனா. இப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஏற்கனவே காஞ்சனா 4ம் பாகத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்தன. அதேசமயம் லாரன்ஸ் வேறுசில படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக அவர் நடிக்கவிருந்த 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் சில நாட்களுக்கு முன்பு காஞ்சனா 4ம் பாகத்தின் படப்பிடிப்பை ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். இதனை இப்படத்தை தயாரிக்கும் கோல்ட் மைன்ஸ் நிறுவனர் மணி ஷாவும் உறுதிபடுத்தியுள்ளார்.

சுமார் ரூ. 100 கோடிக்கு பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஏற்கனவே கமிட்டாகி உள்ளார். இப்போது இன்னொரு நாயகியாக மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா பதேகி இணைந்துள்ளார். பாலிவுட்டில் பல நடித்துள்ள இவர் பெரும்பாலும் கவர்ச்சி பாடல்களில் அதிகம் தோன்றி நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !