இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி!
ADDED : 387 days ago
வதந்தி வெப் தொடரின் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா. அதன் பிறகு லப்பர் பந்து படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் நடிகை என்பதை கடந்து இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையும் உள்ளவர்.
மணிரத்னம் இயக்கியுள்ள 'தக் லைப்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது சஞ்சனா இயக்குனர் அவதாரம் எடுக்கின்றார். இதில் நாயகனாக கவின் நடிக்கின்றார் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.