பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி!
ADDED : 249 days ago
நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வித்தியாசமான கதை களங்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது அல்லமால் இப்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது சாய் பல்லவி அளித்த பேட்டி ஒன்றில் அவரின் பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, நான் பள்ளி பருவத்தில் வகுப்பை கட் அடித்து ஆடிட்டோரியத்தில் தான் நடன பயிற்சியில் ஈடுபடுவேன். நான் வகுப்பில் இல்லாதது எனது ஆசிரியர்களுக்கு தெரியும். ஆனாலும், எனது முயற்சி தெரிந்து என்னை கண்டித்தது இல்லை. இளம் வயதிலேயே மேடை பயம் என்பது எனக்கு இல்லாமல் போனதுதான் நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமென்று நினைக்கிறேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.