மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
248 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
248 days ago
இயக்குனர் கவுதம் மேனன் தற்போது மலையாளத்தில் 'டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' எனும் படத்தை இயக்கினார். சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் ரிலீஸூக்கு கவுதம் மேனன் தந்த பல பேட்டிகளில் சூர்யா, தனுஷ் குறித்து பேசியது சர்ச்சையானது அனைவரும் அறிந்தது. தற்போது மற்றொரு சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.
அதன்படி, நான் படங்களின் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இன்றைய சூழலில் சாதி இல்லை என்று தெரிந்தும் அதை மையப்படுத்திய கதைகளை படமாக எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்றைய சூழலில் இந்த மாதிரி படங்களை எடுக்க முடியாது என்பதால் 80, 90களில் நடந்ததாக இந்த படங்களை எடுக்கிறார்கள். இந்த கதைகள் எல்லாம் சொல்லப்பட வேண்டியதில்லை என்று எனக்கு தோன்றுகிறது. அதே மாதிரியான ஒரு கதையை இன்று நம்மால் சொல்ல முடியாது. யாருக்கும் அந்த மாதிரியான கதை தேவையில்லை என தெரிவித்தார்.
248 days ago
248 days ago