சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ADDED : 334 days ago
நடிகர் சிலம்பரசன் தற்போது 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்து ரிலாக்ஸாக சுற்றுலா சென்றுள்ளார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி, அஸ்வந்த் மாரிமுத்து ஆகியோர் இயக்கத்தில் புதிய படங்களில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் குறுகிய கால கட்டத்தில் நடிக்க பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்கிறார்கள்.