உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சினிமாவுக்காக 6 மாதத்தில் ஆங்கிலம் கற்ற டி.ஆர்.ராமச்சந்திரன்

பிளாஷ்பேக் : சினிமாவுக்காக 6 மாதத்தில் ஆங்கிலம் கற்ற டி.ஆர்.ராமச்சந்திரன்

காமெடி நடிகரான டி.ஆர்.ராமச்சந்தின் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது மார்டன் தியேட்டர்ஸ் 'திவான் பகதூர்' என்ற படத்தை தயாரித்தது.

ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதகமான இந்திய பணக்காரர்களுக்கு வழங்கிய பட்டம் 'திவான் பகதூர்'. அப்படியொரு பட்டத்தை படிப்பறிவே இல்லாத பணக்காரரான காளி.என்.ரத்தினத்திற்கு வழங்குகிறது. ஆங்கில அரசு இப்படி கண்டபடி பட்டம் வழங்குவதை எதிர்க்கும் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன் எப்படி எல்லாம் காளி என்.ரத்தினத்தை டார்ச்சர் செய்கிறார் என்பதை காமெடியாக சொன்ன படம்.

இந்த படத்தில் நடிப்பதற்காக தமிழ் மட்டுமே தெரிந்த டி.ஆர்.ராமசந்திரன் 6 மாதங்களில் ஆங்கிலம் கற்றுக் கொண்டு ஸ்டைலாக ஆங்கிலம் பேசினார். படத்தை தயாரித்து இயக்கிய மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் லண்டனில் ஆங்கிலம் படித்தவர். அவரே வியந்து போனார். தன்னை விட ஸ்டைலாக ஆங்கிலம் பேசி நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனை பாராட்டி கார் பரிசாக வழங்கினார். இது அப்போது பரவலாக பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !