உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்.கே.நகர் எம்எல்ஏ.,வாக ரவி மோகன்: 'கராத்தே பாபு' பட 'அப்டேட்'

ஆர்.கே.நகர் எம்எல்ஏ.,வாக ரவி மோகன்: 'கராத்தே பாபு' பட 'அப்டேட்'


'காதலிக்க நேரமில்லை' படத்தை தொடர்ந்து 'ஜீனி', சிவகார்த்திகேயனின் 25வது படம் ஆகியவற்றில் பிஸியாக நடித்து வரும் ரவி மோகன், அடுத்ததாக 'டாடா' இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ரவி மோகனின் 34வது படமான இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

'கராத்தே பாபு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிமுக வீடியோவில், தமிழக சட்டசபையில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,வாக ரவி மோகன் நடித்துள்ளார். அதிலும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ.,வாக நடித்திருக்கும் அவர், சண்முக பாபு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் முதல்வராக நாசரும், எதிர்க்கட்சி தலைவராக கே.எஸ்.ரவிக்குமாரும் நடித்துள்ளனர். இந்த அறிமுக வீடியோ டீசர் வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !