உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம்

லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம்

தமிழில் ஹே சினாமிகா என்ற படத்திற்கு பிறகு காந்தா என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார் துல்கர் சல்மான். கடந்த அக்டோபர் மாதத்தில் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த லக்கி பாஸ்கர் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். அப்படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது.

ஆகாம்சலோ ஒகதாரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பவன் சதினேனி என்பவர் இயக்குகிறார். சாத்விகா வீரவள்ளி நாயகியாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். லக்கி பாஸ்கர் ஹிட்டுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !