வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள்
ADDED : 302 days ago
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛விடாமுயற்சி'. ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தபடம் உலகம் முழுதும் இன்று (பிப்., 6) வெளியானது. கடைசியாக 2023 பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு' படம் வெளியானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படம் வெளியாவதால், திரையிட்ட இடங்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
திரைப் பிரபலங்களான திரிஷா, ரெஜினா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அஜித்தின் அடுத்த படமான 'குட் பேட் அக்லி' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அப்படத்தில் உடன் நடித்த அர்ஜூன் தாஸ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து 'விடாமுயற்சி' படத்தை கண்டு ரசித்தனர்.