நடிகை பார்வதி நாயருக்கு ‛டும் டும் டும்': சென்னை தொழிலதிபரை மணந்தார்
ADDED : 253 days ago
தமிழில் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', அஜித்குமாரின் 'என்னை அறிந்தால்', விஜய்யின் 'தி கோட்' படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்திற்கு தயாராகினர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் ஒரு வாரமாக மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட சடங்குகள் நடந்தன.
இன்று (பிப்.10) இருவருக்கும் சென்னை திருவான்மியூரில் வைத்து திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.