உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்

நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்

கடந்த 2001ம் ஆண்டில் விஜய், சூர்யா இணைந்து நடித்த படம் ப்ரண்ட்ஸ். இவர்களுடன் தேவயானி, ராதாரவி, வடிவேலு, சார்லி, மதன்பாப், விஜயலக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தை அப்படியே தமிழில் இயக்கியிருந்தார் சித்திக். இளையராஜா இசையமைத்தார். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ப்ரண்ட்ஸ் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி நவம்பர் 21ம் தேதி ரீரிலீஸ் செய்கிறார்கள். அது குறித்த போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !