உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது

பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது

மதராஸி படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 25வது படம் பராசக்தி. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, பசில் ஜோசப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்திருப்பதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்து இருக்கிறார்கள். அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த பராசக்தி படம் பொங்கலையொட்டி வருகிற ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கும் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !