மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார்
மலையாளத்தில் நடிகர் மோகன்லால் அறிமுகமானது பாசில் இயக்கியத்தில் வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் தான். ஆனால் அதற்கு முன்னதாக மோகன்லால் முதன்முதலாக நடித்த படம் என்றால் அது திரநோட்டம் திரைப்படம் தான். சில காரணங்களால் அப்போது இந்த படம் வெளியாகவில்லை என்றாலும் 2005ல் கொல்லத்தில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டது. அந்த வகையில் மோகன்லால் நடித்த முதல் படம் இதுதான்.
இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து அறிமுகமான இன்னொரு நடிகர் தான் கோபகுமார். இந்த படம் வெளியாகாததால் மலையாளத்தில் அவருக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து தமிழில் இரண்டு படங்களில் நடித்த அவர், சில படங்களில் நடித்துக் கொண்டே, வழக்கறிஞர் பணியையும் செய்து வந்தார்.. 73 வயதான அவர் சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு கீதா மேனன் என்கிற மனைவியும் ரேவதி என்கிற மகளும் இருக்கின்றனர்.