லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்'
2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே, 'பைசன், டியூட், டீசல், கம்பி கட்ன கதை' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'டியூட்' படத்திற்கு சிறப்பான முன்பதிவு கிடைத்தது. படம் வெளியான நான்கு நாட்களில் 83 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மற்ற படங்களுக்கான அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு வெளியாகவில்லை.
பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் விசாரித்த வரையில் 'பைசன்' படத்தின் தமிழக வியாபாரம் 15 கோடி அளவில் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இப்படம் இதுவரையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 20 கோடிக்கும் கூடுதலான வசூலைப் பெற்றுள்ளதாம். ஆகவே, லாபத்தில் நுழைந்து முதல் தீபாவளி படமாக 'பைசன்' படம் அமைந்துள்ளது.
அதற்கடுத்து 'டியூட்' படத்தின் தமிழக வியாபாரம் சுமார் 30 கோடிக்கு நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இப்படம் உலக அளவில் 83 கோடியைக் கடந்துள்ளது. அதில் தமிழக வசூல் 40 கோடி இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்தபடமும் லாபத்தில் நுழைந்துள்ளது என்கிறார்கள்.
'டீசல்' படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை, இன்னும் 5 கோடியைத் தொடவில்லை என்பதுதான் தகவல். 'பைசன், டியூட்' படங்களுடனான மோதலில் இப்படம் பின் தங்கியுள்ளது.