உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை

தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தீபாவளி அன்று படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் அல்லது பாடல், அல்லது வேறு ஏதாவது அப்டேட் இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இரவு வரை காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே பதிலாக கிடைத்தது.

ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை என்று விசாரித்தால், கரூர் சம்பவம் காரணமாக விஜய் தரப்பில் தீபாவளியை பெரிதாக கொண்டாட வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஜனநாயகன் படம் தொடர்பாகவும் எந்த தீபாவளி அப்டேட்டும் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். தீபாவளிக்காக ஏதாவது செய்தால், அது அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படும் என்பதால் இந்த முடிவு.

இன்னும் சில வாரங்கள் கழித்து ஜனநாயகன் பிரமோஷன் தொடங்கப்படும். அப்போது லிரிக்கல் வீடியோ, பாடல், பேட்டிகள் வெளியாகும். மலேசியாவில் ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடந்த விஜய் தரப்பு முடிவு செய்து இருந்தது. இப்போது அவருக்கு கூட்டம் ஆகாதே. அதனால், அந்த விழாவும் நடக்குமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக ஆர்ப்பாட்டம், கொண்டாட்டங்கள் இல்லாமல் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பு என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

angbu ganesh, chennai
2025-10-22 09:41:33

இவனுக்கெல்லாம் ஒன்னும் வர மாட்டேந்து


ஜெய்ஹிந்த்புரம், Madurai
2025-10-22 02:08:23

ரணநாயகன் - புது டைட்டில்..


yuva Kanish
2025-10-21 19:57:20

எதுக்கு promotion


Ajrjunan, Thuraiyur
2025-10-21 16:37:22

அப்டேட் இல்லை.