விக்ரம் உடன் ஒரு படம் பேச்சு வார்த்தையில் உள்ளது : உன்னி முகுந்தன்
ADDED : 243 days ago
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். சமீபத்தில் இவர் மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'மார்க்கோ' படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இவர் தமிழில் சீடன், கருடன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது உன்னி முகுந்தன் அளித்த ஒரு பேட்டியில், எனக்கு தமிழ் சினிமாவில் எல்லோரையும் பிடிக்கும். தமிழ் சினிமா பார்த்து வளர்ந்த பையன் நான். தமிழ் சினிமாவில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக பிடிக்கும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கமல், விக்ரமை சொல்லலாம். ஒரு படத்திற்காக முழுமையாக மாறி நிற்கும் இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் என் ஆதர்சம். விக்ரம் உடன் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.