காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின்
ADDED : 239 days ago
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் அதன்பின் சீரியல்களில் நாயகியாக நடித்தார். பின்னர் அப்படியே சினிமாவிற்கு பயணித்தவர், நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தார். பின்னர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் நடித்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் இன்று காதலர் தினத்தையொட்டி தன்னுடைய காதலரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் ஜாக்குலின். இந்த புகைப்பட கலைஞர் யுவராஜ் செல்வ நம்பிதான் என்னுடைய காதலர் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.