மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
202 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
202 days ago
இன்றைய காலகட்டத்தில் தியேட்டர்களை நோக்கி தினமும் வருபவர்கள் என்றால் அது இளைஞர்கள் மட்டுமே. எப்போதாவது ஒரு முறைதான் குடும்பத்தோடு வரும் ரசிகர்களைப் பார்க்க முடிகிறது. அதனால், இளைஞர்களைக் கவரும் விதத்தில் படங்களைக் கொடுக்கத்தான் பலரும் முயற்சிக்கிறார்கள்.
நேற்றைய தினம் ஒன்பது நேரடி தமிழ்ப் படங்கள் வெளியான நிலையில் அடுத்த வாரப் போட்டியில் இரண்டே இரண்டு படங்கள்தான் முக்கியமாகப் போட்டியில் இருக்கிறது. 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படமும், தனுஷ் இயக்கத்தில் இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படமும் தான் போட்டியில் உள்ளன.
இரண்டு படங்களுமே இளம் காதல் கதையாகப் படமாகி உள்ளது. 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படமாகவும், 'ஓ மை கடவுளே' படத்திற்குப் பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள படமாகவும் 'டிராகன்' படம் வெளிவர உள்ளது. இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்தவர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த 'டான்' படம் போல இருப்பதாக விமர்சித்தார்கள். ஆனால், இது வேற மாதிரியான படம் என படக்குழு தெரிவித்துள்ளது.
தனுஷ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'ராயன்' படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது. இதற்கு முன்பு தான் இயக்கிய 'ப பாண்டி, ராயன்' இரண்டு படங்களிலும் நடித்த தனுஷ் இந்தப் படத்தில் தான் நடிக்காமல் இளம் நட்சத்திரங்களை வைத்து படமாக்கியுள்ளார். எப்படியும் படத்தில் ஏதாவது ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
இந்த இரண்டு படங்களும் இளைஞர்களைத் தியேட்டர்களுக்கு வரவழைத்து தியேட்டர்காரர்களைக் காப்பாற்றுமா என்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
202 days ago
202 days ago