உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள்

ஷபானாவா இது... : குழம்பிய ரசிகர்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து தமிழ் நேயர்களின் கிரஷாகா மாறியவர் ஷபானா. தொடர்ந்து மிஸ்டர் மனைவி தொடரிலும் ஹீரோயினாக நடித்து வந்த ஷபானா திடீரென அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார். அதன்பின் சீரியல்கள் எதிலும் கமிட்டாகாத அவர், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய புகைப்படங்களில் அவர் ரொம்பவே மாறியிருக்கிறார். புஷு புஷு கண்ணங்களுடன் குஷ்பு போல இருந்தவர், ஒட்டிய கண்ணங்களுடன் வேறொரு பெண்ணை போல் காட்சியளிக்கிறார். தற்போது அவரது புகைப்படங்களை பார்க்கும் பலரும் ஷபானா அக்கவுண்டில் யார் இந்த புதுப்பெண் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !