மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
228 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
228 days ago
கடந்த வருடம் பிப்ரவரியில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் பிரம்மயுகம் என்கிற திரைப்படம் வெளியானது 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நடக்கும் விதமான கதை அம்சத்துடன் ஒரு ஹாரர் திரில்லர் படமாக கருப்பு வெள்ளையில் இது உருவாகி இருந்தது. இந்த படத்தில் மம்முட்டி 80 வயதான ஒரு மாந்திரீகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் கதையும் மம்முட்டியின் தோற்றமும் மட்டுமல்ல படத்தின் காட்சிகளும் பின்னணி இசையும் கூட ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்றன. இந்த படத்தை ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு கலை பண்பாட்டுக் பல்கலைகழகம் ஒன்றில் திரைப்பட பயிற்சி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிரம்மயுகம் படம் ஒரு பாடமாக திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள காட்சிகளின் அமைப்பு மற்றும் இசை குறித்து அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
228 days ago
228 days ago