சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன்
ADDED : 294 days ago
சினிமா பாடலாசிரியரான சினேகன், நடிப்பு, பிக்பாஸ் என பல தரப்பு மக்களிடம் பிரபலமானார். தொடர்ந்து கமல்ஹாசனின் ‛மக்கள் நீதி மய்யம்' கட்சியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். தற்போது சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து வரும் சினேகன், கன்னிகா ரவி என்கிற நடிகையை காதலித்து கடந்த 2021ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர்.
இந்நிலையில், குழந்தைகளை கமல்ஹாசனிடம் அழைத்து வந்து சந்தித்து சினேகன், கமல்ஹாசனை தனது மகள்களுக்கு பெயர் வைக்க சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனும் அந்த இரட்டை குழந்தைகளுக்கு 'காதல்', 'கவிதை' என பெயர் வைத்துள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சினேகன் தனது மகள்களுக்கு கமல்ஹாசன் தங்க வளையல்களை பரிசளித்துள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.