மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
226 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
226 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
226 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
226 days ago
முரளி, ராதா மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002ம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படம் காமெடி காட்சிகளுக்காக பெரும் வெற்றி பெற்றது. யுவஸ்ரீ கிரியேஷன் சார்பில் எஸ்.வி. தங்கராஜ் தயாரித்திருந்தார் தாஹா இயக்கியிருந்தார்.
தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் என்று தலைப்பிட்டுள்ளனர். கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இளம் ஜோடிகளாக விக்னேஷ் - அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள்.
செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தை தயாரித்த எஸ்.வி தங்கராஜ் தயாரிக்கிறார், ஹரிஹரன் இசையமைக்கிறார். கருப்புத் தங்கம் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது இந்த கதையில் பஸ் தான் ஹீரோ. அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்சை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்றார் போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.
கொடைக்கானல், பன்றிமலை போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி, காரைக்குடி மற்றும் சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.
226 days ago
226 days ago
226 days ago
226 days ago