மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
201 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
201 days ago
தமிழ், ஹிந்தியில் உருவாகி வரும் லயன் என்ற படத்தில் நடிக்கும் ஜோதிகா, ஹிந்தியில் டப்பா கார்ட்டல் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷபானா ஆஸ்மி, ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அதோடு அவர்கள் தங்களது தலையில் டப்பாவை வைத்து போஸ் கொடுத்துள்ளார்கள்.
இந்த டப்பா கார்ட்டெல் வெப் தொடரில் சபானா ஆஸ்மி, ஜோதிகா மட்டுமின்றி அஞ்சலி ஆனந்த், ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப்தொடர் பிப்ரவரி 28ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஷபானா ஆஸ்மியின் காலைத் தொட்டு ஜோதிகா ஆசி பெற்ற புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
201 days ago
201 days ago