மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
202 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
202 days ago
'விடாமுயற்சி' படத்திற்கு பிறகு அஜித்குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பட வெளியீட்டிற்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், பாடல், டீசர் உள்ளிட்ட அப்டேட்கள் இம்மாத இறுதியில் இருந்து அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'எக்ஸ்' தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர், 'ப்ரோ எங்களோட கடைசி நம்பிக்கை குட் பேட் அக்லி மட்டும் தான். அந்த மியூசிக் நெருப்பை சேர்த்து விடுங்க தியேட்டர் சிதறட்டும்' என ஜி.வி.பிரகாஷூக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், ''தீயா வேலை செஞ்சுட்டு இருக்கேன். நீங்கள் எதிர்பார்ப்பதை விட சீக்கிரமாகவே அதனை பார்ப்பீர்கள்'' என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை அடுத்து அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
202 days ago
202 days ago